Header Ads



பாகிஸ்தான் - இந்தியா இன்று மோதல், இலவசமாக பார்க்க சந்தர்ப்பம்


ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் அணிகளுக்கான, கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (23) நடைபெறவுள்ளது.


இப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


இந்தியா ஏ அணியும், பாகிஸ்தான் ஏ அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இலங்கை தோல்வியடைந்தது.


மற்றொரு அரையிறுதியில் பங்களாதேஸை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.


இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 08 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.


இதேவேளை, இந்த போட்டியை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக பார்க்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.