Header Ads



மகிந்தவோ, நாங்களோ பதவி விலகவில்லை - மக்கள் எம் மீது அன்பு வைத்திருக்கின்றார்கள்


முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவில்லை எனவும் பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


அண்மையில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விபரங்களை வெளியிடப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மாவத்தகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறுகையில், நாங்கள் அமைச்சர் பதவிகளை கைவிட்டு தப்பி சென்றதாக கூறுகின்றார்கள்.


மறைந்திருந்ததாக கூறுகிறார்கள், மறைந்திருந்து தற்பொழுது மீண்டும் வந்ததாக கூறுகிறார்கள்.


நாங்கள் யாரும் மறைந்திருக்கவில்லை நாங்கள் யாரும் அமைச்சு பதவிகளை விட்டு விலகவும் இல்லை.


அமைச்சுப் பதவிகளை விட்டு விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது, மகிழ்ந்த ராஜபக்ச பதவி விலகவில்லை அவரை பதவி விலகச் செய்தார்கள், இந்த அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் துல்லியமான பதில்கள் வெளியிடப்படும்.


ஏனைய தரப்புக்களின் செயற்பாடுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அனைத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் அமைதியாக இருக்கிறோம், யாராவது நினைத்தாள் நாம் அஞ்சு ஒளிந்து விட்டோம் என்று அது தவறு.


நாங்கள் அவ்வாறு பயந்து ஒளியக்கூடிய நபர்கள் இல்லை,


மக்கள் எம் மீது அன்பு வைத்திருக்கின்றார்கள் அனைத்து விடயங்களையும் நாம் விரைவில் அம்பலப்படுத்துவோம் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.