Header Ads



உயிர் தப்பிய இளைஞனின் திகில் அனுபவம்


பொலன்னறுவையில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து மோதி ஓடைக்குள் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.


பொலன்னறுவை, மானம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு 41 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதேவேளை இவ் விபத்தில் உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பில்  கூறுகையில், 


"கதுருவெலயிலிருந்து கல்முனைக்கு பேருந்து பயணிக்கவிருந்தது. சுமார் 50 பேர் இருந்தனர். பத்து பேர் நின்றிருந்தனர். 7.30 மணியளவில் பேருந்து புறப்பட்டது. மின்னல் வேகத்தில் பயணித்தது.


பாலத்தை நெருங்கும் போது திடீரென நின்ற பேருந்து பின்னர் ஆற்றில் விழுந்தது. நான் ஜன்னல் ஓரத்தில் இருந்தேன். நான்தான் முதலில் வெளியே வந்தேன். பலர் மயக்கமடைந்திருந்தனா்.


5 முதல் 10 நிமிடங்களில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததனர். என கூறியுள்ளார்.


எனினும் இந்த பேருந்துக்கு பயணிகள் போக்குவரத்துக்கான முறையான உரிமம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.


கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட சட்டரீதியற்ற அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி இவர்கள் பேருந்தினை செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.