Header Ads



நழுவிக் கொண்டார் ரணில்


தற்போதைய நிலையில் இந்த அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம்தான் இறுதித் தீர்வா ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தம்தான் இறுதித் தீர்வென எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் கூறவில்லை.  தற்போதைய நிலைமையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான சூழல் இல்லை என்றும் இருக்கின்ற அதிகாரங்களைக்கொண்டு தற்காலிகத் தீர்வை வழங்குவதே நோக்கமாகும் என்றார். 


தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு தான் சம்மதம் தெரிவித்தாலும் பாராளுமன்றமே இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.