மக்களிடையே நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரிப்பு
அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (19.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தற்போது வடக்கில் மதுபான பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதுடன் இன்சுலின் உற்பத்தி தடைப்படுகின்றது.
மதுபாவனை மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். குறிப்பாக இளையவர்கள் நரம்பியல் நோய்கள் மற்றும் திடீர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றார்கள்.
இதனால் அவர்களை அறியாமலே அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
இந்த மதுபாவனையை கட்டுப்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவ நிபுணர் இனைஞர்களின் திடீர் மரணத்துக்குக் காரணம் மதுபானம், போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளமை என மிகவும் தௌிவாக கூறி அவற்றைத் தவிர்க்க இளைஞர்கள் முன்வர வே ணடும், சமூக தொண்டர் நிறுவனங்கள் போதை,மது பாவனையை சமூகத்திலிருந்து துரட்சி செய்ய நீண்ட கால குறுங்கால திட்டங்கள் தீட்டி செயல்பட வேண்டும். இளம் சமூகத்தினரைக் காப்பாற்ற இது ஒன்றே வழி.
ReplyDelete