மரண வீட்டிற்குச் சென்ற சட்டத்தரணி, மயங்கி விழுந்து மரணம்
- பாலித ஆரியவங்ச -
மரண வீட்டுக்குச் சென்றிருந்த பிரபல சட்டத்தரணி, மயங்கிவிழுந்து மரணமடைந்த சம்பவமொன்று பண்டாரவளையில் இடம்பெற்றுள்ளது.
பண்டாவளை நகரில், ஜூலை 1ஆம் திகதி பிற்பகல் மரணவீடொன்றில் மரண சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. அதில் பங்கேற்றிருந்த கொழும்பு மருதானையைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான பிரியந்த பாலசிங்ஹ என்பவரே மயங்கிவிழுந்துவிட்டார்.
அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டார் என்பது கண்டறியப்பட்டது. பண்டாரவளையில் உள்ள பிரபல வர்த்தகரின் மரண வீட்டுக்கே இந்த சட்டத்தரணி வருகைதந்திருந்தார்.
கொழும்பில் மரணித்த பிரபல வர்த்தகரின் சடலம் அமரர் ஊர்த்தியில் பண்டாரவளைக்கு எடுத்துவரப்பட்டது. அந்த வாகனத்திலேயே சட்டத்தரணியின் சடலம் கொழும்புக்கு எடுத்துவரப்பட்டது.
Post a Comment