Header Ads



ஆமதுரு விவகாரம், மனோ கணேசன் கூறியுள்ளவை


 ஆமதுரு விவகாரமும், மனோ கணேசனும்


ஆமதுரு விவகாரம் 


அதற்கு அனுமதி தராத தேரவாத பெளத்தம்,  நாம் என்ன செய்ய வேண்டும்?


1) கடைசியாக அகப்பட்ட சுமன ஆமதுரு சம்பவத்தில் அந்த பெண்களை படமெடுத்து, தாக்குவது தப்பு. 


2) அதை கட்டாயம் கண்டிப்போம் என்பது என் முற்போக்கு. 


3) அதிலும் இந்த "பாலியல் சுதந்திரம்" என்பது "பலாத்காரம் இல்லாத சுயவிருப்ப தனிப்பட்ட விவகாரம்", என்பதும் முற்போக்குதான்.  


4) ஆனாக்க, இந்த முற்போக்கு அவசரத்தில், ஆமதுரர்களை தப்ப விடக்கூடாது.


5) இவர்கள் தேரவாத பெளத்தர். தேரவாத துறவிகளுக்கு இதில் "தடா". 


6) தாய்லாந்தின் மஹாயான பெளத்த துறவிகளுக்கு "No தடா".


7) ஆகவே இது இலங்கை பெளத்தத்துக்கு உள்ளே பெரும் சிந்தனை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை அவர்கள் பார்த்து கொள்ளட்டும். 


8) நமது அக்கறை என்ன? இந்நாட்டில் அரசியல் மறுசீரமைப்பில் , "இது செய்யலாம்" "இதை செய்ய கூடாது" என இந்த ஆமதுரர்கள் இனி கூற வரக்கூடாது.


9) இந்த கருத்தை, குழப்பிக் கொள்ளாமல், நாம் முன்னெடுப்போம். 


10) நான் எப்போதுமே, மதம், - எந்த மதமும் - அரசியலில் வேண்டாம் என எப்போதும் கூறுபவன். இந்நாடு "மதசார்பற்ற" நாடாக வேண்டும் என ரொம்ப நாளாகவே கூறி வருகிறேன். அதான் என் முற்போக்கு கொள்கை. இனி இந்த கொள்கையை காட்டமாகவே சொல்வேன்.  இதுதான் அதற்கான காலம். 


11) கீழே உள்ள படங்களில் ஒன்று, சுமார் 15 வருடங்களுக்கு முன், இறுதி யுத்தத்தின் போது, இன்றைய போரில்லா கால "வீரர்கள்" எவருமே இல்லாத போர் காலத்தில் கூட்டாக நாம் கொழும்பில் நடத்திய "போர் எதிர்ப்பு" மாநாட்டில் ஞானசாரர் உட்பட பிக்குகள் உள்நுழைந்து குழப்பம் விளைவித்த போதாகும். இதான் நான் எதிர்கொண்ட பிக்குகளுடனான முதல் மோதல். முதல் காதல் மாதிரி, முதல் மோதலும் மறக்காது அல்லவா? நான் அன்றும், இன்றும் அதே கொள்கையில். ஆகவே, இந்நோக்கில் இந்நிகழ்வுகளை பயன்படுத்துவோம்.

#மனோகணேசன்




1 comment:

Powered by Blogger.