பல்லாயிரம் பேரின் நீர் விநியோகங்கள் துண்டிப்பு
இலங்கையில் நீர்க்கட்டணங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்கள் செலுத்தாவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் நீர்க் கட்டணத்தை செலுத்தாத 90 ஆயிரத்து 617 பேரின் நீர் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை நீர்க் கட்டணங்களை காலம் தாமதமாகியும் செலுத்தாத ஐயாயிரத்து 270 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த ஆண்டில் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் சுமார் 30 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் நீர் பயன்பாட்டுக்கான புதிய இணைப்புக்களை பெற்றுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment