யுவதியின் மரணம் தொடர்பில், சுகாதார அமைச்சரின் விளக்கம்
பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் எனவும், அவருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய, அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன (21 வயது) என்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
எவ்வாறாயினும், ஊசி மூலம் மருந்து ஏற்றியதையடுத்தே அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
பெற்றோரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இந்த அப்பாவிப் பெண் மரணிக்க காரணமாக அமைந்த சுகாதார அமைச்சரை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு இந்த நாட்டு பொதுமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றோம். அவ்வாறு செய்யாது பதுங்கிப் பதுங்கியிருந்தால் அதற்கான சரியான பதிலை பொதுமக்கள் வழங்கத் தயங்கமாட்டார்கள் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றோம்.
ReplyDeleteஇந்த நாட்டு மக்கள் சுகாதார அமைச்சர், மருந்து கொள்வனவுடன் தொடர்புடைய அத்தனை அதிகாரிகளும் உடனடியாக பதவி விலகி அனைவரும் அந்த குடும்பத்துக்கு 2 கோடிக்கு குறையாக நட்டஈட்டைக் கொடுத்த பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதே நேரம் தொடர்புடையவர்கள் உயர் நீதிமன்றத்தில் இந்த சுகாதார அமைச்சர் உற்பட அத்தனை பேருக்கும் எதிராக வழக்குத் தொடர்ந்து இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் உரிய நட்டஈட்டையும் பெற வேண்டும். அதற்கு உடனடியாக ஈடுபட வேண்டும். இந்த கேடு கெட்ட சுகாதார அமைச்சரை விரட்ட இந்த நாட்டு மக்கள் அத்தனை பேரும் குரல் கொடுக்க வேண்டும். இந்த சைத்தான்களுடைய கமிசன் வஞ்சகத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பலிவாங்கப் போவது என்பது எமக்குத் தெரியாது.
ReplyDelete