Header Ads



வைத்தியசாலைகளில் அதிகரித்துள்ள உயிரிழப்புக்கள் - பாராளுமன்றத்தில் கூறப்பட்ட காரணம்


இலங்கையிலுள்ள பல பொது வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும் இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம் (05.07.2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் கூறியுள்ளதாவது, சுகாதார அமைச்சின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இரத்தம் ஏற்றும் இயந்திரங்களைத் திருத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டிருந்த போதிலும், அந்த டெண்டர்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.


மேலும், இயந்திரங்களுக்குத் தேவையான உபகரணங்களுக்காக ஒவ்வொரு வருடமும் வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு சுமார் 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகின்றது.


ஆனால் சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்தம் ஏற்றும் கருவிகளை வெளியில் இருந்து கொண்டு வருமாறு கூறுகின்றனர்.


அவ்வாறு வெளியில் இருந்து கொண்டு வர மக்களிடம் பணம் இல்லை.


தயாசிறி ஜயசேகர எழுப்பிய கதையில் ஓரளவுக்கு உண்மை இருப்பதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இது தொடர்பாக நீதிமன்றத்திடம் இருந்து உத்தரவுகள் கூட கிடைத்துள்ளதாகவும், பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.