Header Ads



யூதர்களின் புனித நூலை எரிப்பதற்கு அனுமதி கிடைத்தும், அதனை இறுதியில் கைவிட்ட முஸ்லிம் இளைஞன் கூறிய விடயங்கள் (வீடியோ)


சுவீடனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் முன், யூதர்களின் புனித நூலை எரிப்பதற்கு அஹமத் அல்லுஷ் என்ற முஸ்லிம் இளைஞர் அனுமதி பெற்றிருந்தார். முழு உலகின் கவனமும் இதன்பால் குவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் நேற்று 15-07-2023 புனித குர்ஆனை சுமந்தபடி சம்பவ இடத்திற்கு வந்த அஹ்மத் அல்லுஷ், 


>

எந்த ஒரு புனித நூலையும் எரிக்கக்கூடாது என்பதில் கவனத்தை ஈர்க்க விரும்பியதாகவும்,  நான் ஒரு முஸ்லீம், என்னால் புனித மற்றும் மத புத்தகங்களை எரிக்க முடியாது என்று கூறியதுடன்,  கருத்துச் சுதந்திரத்துக்கும், இனக்குழுக்களை இழிவு படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. குரான் மற்றும் பிற மத புத்தகங்களை எரிப்பதை வெறுக்கத்தக்க குற்றமாக கருத வேண்டும். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென்பதற்காகவே எரிக்கும் செயலுக்கு போலீசாரிடம் அனுமதி பெற்றேன். எந்த மதப் புத்தகத்தையும் எரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லையெனக் குறிப்பிட்டு எரிப்பதை கைவிட்டார்.


மிகப்பெரும் பிரச்சார அழைப்புப் பணியை, பல மில்லியன் பேருக்கு பக்குவமாக, பொறுமையாக, சகிப்புடன் செய்த திருப்தியுடன் அங்கிருந்து அகன்று சென்றார் அஹமத் அல்லுஷ்.


இஸ்லாத்தில் வன்முறைக்கோ, ஏனைய மதங்களை இழிவுபடுத்தவோ, சக மனிதர்களை துன்புறுத்தவோ எந்த அனுமதியும் இல்லை.

https://fb.watch/lPnHD9ABkm/

1 comment:

  1. இதுதான் மிகச் சிறந்த முன்மாதிரி, இது போன்ற செயல்கள் மூலமாக மற்ற மதத்தவர்களைக் கவரும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.