சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விரிவுரையானது இணையவழியில் நடத்தப்படுவதுடன் வர்த்தகர்கள் இலங்கையில் அமைந்துள்ள வங்கிக் கணக்கில் 210 அமெரிக்க டொலர்களை வைப்பிட்டு இந்த விரிவுரையில் இணைவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விரிவுரையின் மூலம் மட்டும் ஜெரோம் பெர்னாண்டோ 1.5 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.
இதன் பின்னர், அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்த விரிவுரைகளை மேற்கொண்டு வருவதுடன், இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கில் பணம் வழைமையை போன்று வைப்பிடப்படுவதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
ஜெரோம் பெர்னாண்டோ சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை தெரியவந்துள்ள போதிலும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்காவிலுள்ள மண்டபம் ஒன்றில் இந்த விரிவுரை நடைபெற்றது. இந்நிலையில் குறித்த மண்டபம் அடங்கிய காணியை சர்ச்சைக்குரிய ஜெரோமிற்கு வழங்கியதாக, அதன் உரிமையாளர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
முன்னாள் பொலிஸ் அதிகாரியான அவர், தேவாலயத்தை நிர்மாணிப்பதற்காக காணியை நன்கொடையாக வழங்கியதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் அமைப்பதற்காக 9 கோடி ரூபாவுக்கு வாங்கிய இந்த காணி 2015ஆம் ஆண்டு ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
காணியின் உரிமையாளரான பொலிஸ் அதிகாரி ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கோடீஸ்வரராகும்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை வெளிநாட்டவர் ஒருவருக்கு 19,000 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பணத்தில் நிலம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தொழிற்சாலை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யப்பட்டாலும் கூட, தொழிற்சாலை அமைந்துள்ள காணி இந்த வர்த்தகருக்கு சொந்தமானது எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் மாதாந்தம் 110 லட்சம் வாடகையாக பெறுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் இவர் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுள்ளார். அந்த பாடசாலைக்கு பல கோடி செலவில் நீச்சல் தடாகம் கூட கட்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. TW
Post a Comment