காதலனை கடத்திய காதலி பிடிபட்டார்
யுவதி ஒருவருடன் காதல் தொடர்பிலிருந்த இளைஞர் ஒருவர், அந்தத் தொடர்பிலிருந்து பின்வாங்கியதன் பொருட்டு அவரைக் காதலித்த பெண் குறித்த இளைஞனை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இன்று புதன்கிழமை (05) காலை வாத்துவ பிரதேசத்தை சேர்ந்த யுவதி உட்பட நால்வர் இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (04) அலோபோமுல்ல பின்வத்தை வீதியில் சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியில் வந்தே குறித்த இளைஞனைக் கடத்திச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இளைஞனும் அவரது தாயும் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட இளைஞன், யுவதி ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், இருப்பினும் அந்த யுவதியை திருமணம் செய்து கொள்ள இளைஞன் விரும்பாத காரணத்தினால் இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு வெறிச்சோடிய வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment