Header Ads



சவூதி அரேபியாவின் புதிய உற்பத்தி


ஸவுதி அரேபியாவில் நிறுவப்பட்டுள்ள லூஸித் நிறுவனத்தின் வாகன உற்பத்தித் தொழிற்சாளலயினால் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது மின்சாரக் கார்த் தொகுதி எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் சந்தைக்கு வர இருக்கின்றது. 


இக்காரினை தொளைவிலிருந்து இயக்கவும். கையடக்கத் தொலைபேசியிய் ஊடாக இக்காருடன் தொடர்பு கொள்ள முடியும் என்பது இதில் பொருத்தப்பட்டுள்ள புதிய வசதிகளாகும்.


சர்வதேச ரீதியில் அதி சொகுசு வாய்ந்த மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் புகழ் பெற்ற நிறுவனமான Lucid நிறுவனத்தினால் ஸவுதியில் இக்கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஸவுதியின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் ஸல்மானின் 2030 ல் ஸவுதியை தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் தொலை நோக்குத் திட்டத்தின் ஒரு அங்கமாக செயற்படுத்தப்படும் வாகன உற்பத்தித் திட்டத்தின் ஒரு முக்கிய படிக்கள்ளாக இது பார்க்கப்படுகின்றது.


லூசிட் நிறுவனத்தின் மத்திய கிழக்குக்கான நிருவாகத் தலைவரும் பிறதித் தலைவருமாகிய பைஸல் ஸுல்தான் இது தொடர்பில் ஸவுதி அரேபிய பொது நிதியத்தின் சந்திப் பேசியபோது மத்திய கிழக்கில் அதிக கார்கள் விற்பனையாகும் பிரதேசமாகிய ஸவுதி அரேபியாவி பொது முதலீட்டு நிதியத்தில் லூஸித் இணைந்ததன் மூலம் அதன் ஒரு அங்கமாக மாறிவிட்டது தன்னை வழர்த்துக் கொண்டது என்றார்.


சென்ற ஆண்டு மே மாதம் 12.3 பில்லியன் ரியால் செலவில் ஸவுதி அரேபியாவில் லூஸித் நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கார்த் தொழிற்காலை 2030ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500,000 (ஐந்து இலட்சம்) ஆடம்பர மின்சாரக் கார்களை உற்பத்தி செய்வதை இலக்காக் கொண்டுள்ளது. 


உலகின் முன்னனி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள ஸவுதி அரேபியா அதன் கிளைகளை தனது நாட்டிலும் திறந்துள்ளது. இதன் மூலம் 2030ம் ஆண்டில் உலகின் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யும் ஐந்து நாடுகளில் ஒன்றாக ஸவுதி அரேபியா திகழும் என்பதோடு ரியாதின் 30 வீதமான வாகனங்கள் மின்சாரத்தில் ஓடும் வாகனங்களாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.