Header Ads



ஒன்லைன் டெலிவரி தொடர்பில் எச்சரிக்கை (இன்று நடந்த உண்மைச் சம்பவம்)


ஒன்லைனில் பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களின் பணியாளர்கள் இருவர், மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர்களிடமிருந்து சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் திருடி சென்றுள்ள்னர்.


இப்பலோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனபுர யாய 05 ஆம் இலக்க பகுதியில் இன்று -12- பிற்பகல் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இப்பலோகம பொலிஸார்; ஆரம்பித்துள்ளனர்.


சம்பவத்தை எதிர்கொண்ட இரு தொழிலாளர்கள் இது குறித்து இப்பலோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


இதையடுத்து இந்த திட்டமிட்ட குற்றத்தை செய்த சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், இப்பலோகம பொலிஸ் நிலையத்தினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. JV

No comments

Powered by Blogger.