Header Ads



கலாநிதி பட்டம் பெற்ற ரோகித, சமூக ஊடகங்களில் தாறு மாறாக கேள்வி


நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்த ராஜபக்ஷவின் மகனும் நாமல் ராஜபக்சவின் சகோதரருமான ரோகித ராஜபக்ஷ கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.


இதற்கு நாமல் ராஜபக்ஷ சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்தார்.


எனினும் அவரது கலாநிதி பட்டம் தொடர்பான விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் அவரது கல்விச் சான்றுகள் குறித்து சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.


ரோகித ராஜபக்சவின் கல்விப் பயணம் மற்றும் சமீபத்தில் பெற்ற கலாநிதி பட்டம் குறித்து சில தனிநபர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.


ரோகித ராஜபக்சவின் கலாநிதி பட்டம் பற்றிய செய்திகள் வெளிவந்தவுடன், சமூக ஊடக தளங்களில் அவரது கல்வி சாதனைகளின் தன்மை மற்றும் நம்பகத்தன்மை பற்றி பலரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.


அவரது கலாநிதி பட்டத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட பாடம், கற்ற நிறுவனம் அதற்கான ஆதாரம் குறித்து பல நபர்கள் கேள்வி எழுப்பி பதிவுளை வெளியிட்டு வருகின்றனர். 

1 comment:

  1. அந்தக் கலாநிதி பட்டத்தின் விலை 100 டொலர். நியூயோர்க் வீதிகளில் இங்கு மஞ்ஞொக்கா விற்பனை செய்வது போல் விற்பனை செய்து அதற்கான போட்டோக்களையும் செய்து கொடுத்தால் அதன் விலை 100 டொலர் தான். அந்த வகையான கலாநிதிகள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ,சீனா உற்பட பல நாடுகளில் தாராளமாகக் கிடைக்கின்றது. பாடசாலை செல்லாத, கல்வியில் பின்தங்கிய கேடிகள், அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் தான் இந்தவகையான கலாநிதிப் பட்டங்களைத் தேடிச் செல்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.