பிணை செலுத்த முடியாத, பலஸ்தீன அகதிக்கு விளக்கமறியல்
- Ismathul Rahuman -
முச்சக்கரவண்டி சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில், கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய பலஸ்தீன அகதிக்கு நியமிக்கப்பட்ட பிணையை செலுத்த முடியாததினால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
நீர்கொழும்பு, குடாப்பாட்டில் அமைந்துள்ள அகதி முகாமில் இருக்கு பலஸ்தீன நாட்டவரான 25 வயது உதாய் மொஹமட் என்பரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்ததாவது,
சந்தேக நபர் பகற்காலங்களில் அகதிமுகாவில் இருந்துகொண்டு, இரவு நேரங்களில் வெளியே வந்து ஏத்துகால் பிரதேசத்தில் இடம்பெறும் வைபவங்களுக்கு உற்சென்று மது அருந்திவிட்டு குழப்பம் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளன.
சம்பவ திணம் முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு அவரின் கை முறியும் வரை தாக்கிய குற்றச்சாட்டிலே கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் சம்பிக்க ராஜபக்ஷ முன்னிலையில் ஆஜர் படுத்தியபோது இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
பிணையை செலுத்த முடியாததினால் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
Post a Comment