Header Ads



மகனைத் தேடிச சென்றவர்கள் தந்தையை சுட்டுக் கொன்றனர் - கொலையாளிகளை பார்த்து கதறிய சிறுமி


அம்பலாந்தோட்டை கொக்கல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று -19- இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 62 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கொக்கல்ல, கடவர வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்தவரின் மகனைத் தேடி இனந்தெரியாத மூவர் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் இந்த கும்பலை பார்த்து அலறிய போது, ​​அந்த கும்பல் தேடி வந்த நபரின் தந்தை வீட்டை விட்டு வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ​​துப்பாக்கிதாரி அவரை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.


சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.