பெண்ணின் மார்பை கடித்துக்குதறி கொலை செய்த நாய்
அஹங்கம பிரதேசத்தில் உள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் வயோதிப பெண் ஒருவரை உயிரிழக்கும் வரை கடித்து குதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாய் கடித்ததில் குறித்த பெண் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நாய் தாயின் மார்பைக் கடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாய் கடித்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அஹங்கம - திகபெத்த, கோதாகொட கமகே பகுதியைச் சேர்ந்த தயாவதி என்ற 76 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Post a Comment