யுவதிக்கு போட்ட ஊசிக்கு தடை, இலஞ்ச பணத்திலிருந்து இழப்பீடு செலுத்த கோரிக்கை
பேராதனை வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அந்த தடுப்பூசி தொகுதிகளின் பாவனை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து இறக்குமதி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு இழப்பீடு வழங்கப்படுமென கூறும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது தவறையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இழப்பீடுகளை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறையின் அதிகாரிகள் தமது தனிப்பட்ட சொத்துக்களிலிருந்தே வழங்கவேண்டும் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.
மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பயன்பாடுகள் தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக அரச வைத்தியசாலைகளுக்கு நம்பிச் செல்ல முடியாத பயங்கரமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர மருந்து கொள்வனவு எனும் போர்வையில் தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ததன் காரணமாக சுகாதாரத்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தரமற்ற மருந்துகள் மூலம் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு நிச்சயம் இழப்பீடு பெற்றுக்கொடுக்க வேண்டும். அந்த இழப்பீடு மருந்து இறக்குமதிக்காக அமைச்சர் அரச அதிகாரிகள் மற்றும் அவரை சார்ந்த தரப்பினர் பெற்றுக்கொண்ட இலஞ்ச பணத்திலிருந்தும், தமது வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்துள்ள பணத்திலிருந்தும் வழங்கப்பட வேண்டும்.
பொறுப்பில் உள்ளவர்கள் தமது தனிப்பட்ட சொத்துகளிலிருந்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படவில்லை எனின் எதிர்காலத்தில் தமது உயிர், உடமைகளை இழந்து இழப்பீடு வழங்கும் நிலைமை நிச்சயம் ஏற்படும்.
மேலும், பொறுப்பற்றவர்கள் பொறுப்புகளில் அமர்வதற்கு நாட்டு மக்கள் எதிர்காலத்தில் அனுமதி வழங்க மாட்டார்கள் என்றார்.
Post a Comment