Header Ads



இலங்கையில் முஹர்ரம் மாத தலைப்பிறை தென்படவில்லை


உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2023 ஜூலை மாதம் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை புதன் கிழமை இரவு ஹிஜ்ரி 1445 முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.


அவ்வகையில், ஹிஜ்ரி 1444 துல் ஹிஜ்ஜஹ் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2023 ஜூலை 20 ஆம் திகதி ஹிஜ்ரி 1445 முஹர்ரம் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.