Header Ads



செல்பி அடிக்க முயன்ற புதுமணத் தம்பதியும், அவர்களை காப்பாற்ற முயன்றவரும் வபாத்


கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பாரிப்பள்ளியைச் சேர்ந்தவர் சித்திக் (29). இவருக்கும் நவுபியா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் திருமணம் நடந்தது.


இதனைத் தொடர்ந்து புதுமணத் தம்பதி உறவினர் அன்சில்(28) என்பவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர்.


பள்ளிக்கால் என்ற பகுதிக்கு சென்ற குறித்த தம்பதி, நேற்று முன்தினம் மதிய விருந்தை முடித்துவிட்டு மாலையில் ஆற்றுப் பகுதிக்கு சென்றுள்ளது.


அங்கு கரையோரம் இருந்த பாறையின் மேல் நின்று சித்திக், நவுபியா ஜோடி செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அதன்படி மேலே ஏறி செல்பி எடுத்தபோது தம்பதி திடீரென நிலைதடுமாறி ஆற்றுக்குள் தடுமாறி விழுந்துள்ளார். 


இதனைக் கண்ட உறவினர் அன்சில் அவர்களை கா ப்பற்ற ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரும் நீரில் மூழ்கினார்.


இச்சம்பவத்தில் மூவரும் பரிதாபமாக பலியாகினர். கரையில் இருந்த மக்களை இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.


முதலில் அன்சில் சடலம் கண்டுபிக்கப்பட்டது. ஆனால் தம்பதியின் உடல்கள் மறுநாள் பாறை இடுக்கில் கண்டுபிடிக்கப்பட்டது.


அதன் பின்னர் அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.      

No comments

Powered by Blogger.