Header Ads



மஹர பள்ளிவாசலை புதிய, இடத்தில் அமைக்க காணி வழங்குங்கள் - பாராளுமன்றத்தில் கோரிக்கை


புதிய இடத்தில் மஹர பள்ளிவாசலை அமைக்க  மாற்று காணி வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சபையில் வேண்டுகோள் விடுத்தார்.


 பாராளுமன்ற அமர்வின் போது அவர் மேலும் உரையாற்றுகையில்,


மஹர சிறைச்­சாலை வளாகத்தில் இருந்த பள்ளிவாசல், சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்ளது.


நூற்­றாண்டு கால வர­லாறு கொண்­டுள்ள மஹர சிறைச்­சாலை பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்­மா­ணிக்க காணி துண்டொன்றை பெற்றுத் தருமாறு பள்ளிவாசல் நிர்வாகம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றது.


இது விடயமாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களமும் புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் மகரூப் எம்.பி. சபையில்  வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.