படி, நல்லா படி, கஷ்டப்பட்டாவது படி...
பசி எடுத்தால் அங்கு கிடைக்கும் சாராய பாட்டில்களை எடுத்து வித்து டீ போண்டா சாப்பிட்டுவேன். இப்படியே 6 வருடம் போனது. மெரிட் சீட் ல் அரசு கல்லூரியில் M. Sc. MPhil முடித்தும் விட்டேன். அடுத்து P.hD பண்ண Trichy அண்ணா யூனிவர்சிட்டி 2014 ல் இடம் கிடைத்தது. 2017 ல் அப்பா இறந்ததும் என்ன பண்ணுறதுனு தெரியல.
PhD விட்டுட்டு வேலைக்கு போகணும் கட்டாயம். யூனிவர்சிட்டி ல் அனுமதி வாங்கிட்டு வாரத்தில் இரண்டு நாட்கள் சந்தையில் காய்கறி விற்க போனேன். வரும் வருமானத்தில் வயிறு மட்டும் நிரம்பியது மற்ற நாட்களில் ஆராய்ச்சி படிப்பு மற்றும் பேராசிரியர்களின் யூனிவர்சிட்டி fees உதவி னு 2021 ல PhD chemistry முடித்தேன். இப்போ ஒரு பண்ணாட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் Research Scientist ஆக பணி புரிகிறேன்.
என் அறிவுரை : படி.. நல்லா படி.. கஷ்டபட்டாவது படி.
- பாலா — with Suresh Babu.
Post a Comment