அலி சப்ரி ரஹீம், அதாவுல்லா அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பு - ராஜாபக்ஸ சகோதரர்கள் சபையில் இல்லை
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்களிப்பில், மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
தங்கத்தை கடத்திவந்தார் எனக் குற்றச்சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆதரவாக வாக்களித்தார்.
அனுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளியு.டி.ஜே செனவிரத்ன, துமிந்த திஸாநாயக்க மற்றும் ஏ.எல்.எம். அத்தாவுல்லா ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.
அதன்படி பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டு, பிரேரணை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment