ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக, செரிப்டீன் சத்தியப் பிரமாணம்
அவுஸ்திரேலியாவின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்து கொண்ட முகமது ஹுசைன் முகமது ஷெரிபீடீன் அவர்கள் 1978 ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் சட்டத்திறனியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார், 1998 ஆம் ஆண்டு சட்ட முதுமானியினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்ததோடு, 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணியாக ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணியாக பதிவியேற்றார்.
ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவி வகித்த கலாநிதி ஹுசைன் அவர்கள் அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சட்டத்துறையில் கலாநிதி பட்டத்தையும் பெற்று தனக்கும் தனது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்ததோடு சட்டத்துறை கலாநிதி ஆனார்.
அது மாத்திரமன்றி சட்டம் சம்பந்தமான பல நூல்கள் மற்றும் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறு இலங்கையின் சட்டத்துறைக்காக தன்னை அர்ப்பணித்த கலாநிதி ஹுசைன் அவர்கள் தந்துர மகா வித்தியாலயம் மற்றும் சென்ட் சில்வஸ்ட்டர் கல்லூரி போன்றவற்றில் தனது ஆரம்பம் மற்றும் உயர்கல்வியை பெற்றுக் கொண்டார்.
இவ்வாறாக அண்மையில் அவுஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக பதவியேற்றுள்ள இவர் காலம் சென்ற செரீப்டீன் தம்பதியர்களின் இறுதிப் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(News : Aslam Rusly)
Post a Comment