செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவிப்பு
டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்வதற்காக ஐந்து பேருடன் பயணித்து விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் தாய் நிறுவனமான OceanGate அதன் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
“அனைத்து ஆய்வு மற்றும் வணிக நடவடிக்கைகளையும் இடைநிறுத்தியுள்ளதாக” OceanGate நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் பாகிஸ்தானிய-பிரிட்டிஷ் செல்வந்தர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் உட்பட ஐவர் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த நிலையில், விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஜூன் 18 அன்று டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதுடன் அமெரிக்க கடலோரக் காவல்படை ஜூன் 22 ஆம் திகதி கப்பல் ஒரு பேரழிவுகரமான வெடிப்பைச் சந்தித்ததாகக் கூறியிருந்தது.
இந்த அறிவிப்புடன், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலை மீட்பதற்கான நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
Post a Comment