Header Ads



அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் ஹக்கானிய்யா முதலாமிடம்


முஸ்லிம் பண்பாட்டளுவல்கள் திணைக்களம் இலங்கையிலுள்ள  சவூதி அரேபிய  தூதுவரலாயதத்தின் பூரண அனுசரனையில் தேசிய ரீதியில் முதலாவது மாபெரும் அல் குர்ஆன் மனனப் போட்டி  15,16 ம் திகதிகளில் கொழும்பு முவென்பிக் ஹோட்டலில்  நடாத்தியது.


இதில் அகில இலங்கை ரீதியாக அரபுக் கல்லூரி  மாணவ மாணவிகள் பங்குபற்றினர்.


குறித்த போட்டி 30,20,10,05 ஜுஸ்உ என்ற பிரிவுகளாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


மேற்படி போட்டிகளில் கண்டி தஸ்கர அல் ஹக்கானிய்யா அரபுக் கல்லூரி 30 ஜுஸ்உ, 20 ஜுஸ்உ போட்டிகளில் முதலாம் இடங்கள் மற்றும் 20 ஜுஸ்உ போட்டியில் மூன்றாம் இடம், 05 ஜுஸ்உ போட்டியில் மூன்றாம் இடம் என பல இடங்களைப் பெற்று தேசிய ரீதியில் அரபுக் கல்லூரிகள் மட்டத்தில்  முதல் இடத்தை தட்டிக் கொண்டுள்ளது.


மேலும் கண்டி தஸ்கர அல் ஹக்கானிய்யா அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷேஹ் லபீர் ஹனீபா (முர்ஸி) அவர்களின் உம்முல் குரா பெண்கள் அரபுக் கல்லூரியும் 20 ஜுஸ்உ போட்டியில் முதலாம் இடத்தை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


மேற்படி போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று (17) கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.

No comments

Powered by Blogger.