வாழ்வு கொடுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கு ஓடும் இலங்கையர்கள் - பல்லாயிரம் விமான டிக்கெட்டுக்கள் முன்பதிவு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த விடயத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த வருடத்தில் இதுவரை 150,000 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் வேலைகளுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு (முஸ்லிம்) நாடுகளுக்கான விமானங்களை முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 300,000 பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்தப் புள்ளி விவரங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டவை மாத்திரமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment