கனேடிய பிரதமரின் கருத்தை, வன்மையாக கண்டிக்கும் இலங்கை
கறுப்பு ஜூலை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த நாட்டில் கடந்தகால மோதல்கள் குறித்து தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட கதையை முன்வைத்துள்ளதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக 1983 ஜூலை 23 அன்று தமிழ் இனப்படுகொலை நடந்ததாக கூறியதையும் கண்டிக்கிறது.
தேர்தலை அடிப்படையாக வைத்து கனேடிய பிரதமர் இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு கனேடிய அரசாங்கம் உதவிகளை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆள்பார்வை அமைச்சரின் நடத்தை பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலஸ்தீன, காஸா மக்களை அநியாயமாகக் கொன்று குவிக்கும், அவர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்தும் இஸ்ரவேலின் அடாவடித்தனத்தைக் கண்டிக்குமாறு பல தடவைகள் இம்தியாஸ் பாகிர். பா.உ. இந்த அமைச்சரைக் கேட்டுக் கொண்டும். அது பற்றி மௌனமாக இருந்துவிட்டு இனத்துவேசிகளின் கருத்தை விழுங்கி கனடாவைக் கண்டிக்கும் இந்த அமைச்சர் எப்போதாவது கனடா சென்றால் நன்றாக வாங்கிக் கட்டுவார். அப்போது தான் தன்னுடைய ஆள்பார்வையும், அறியாமையும் தெரியவரும்.
ReplyDelete