சனத்தொகை மதிப்பீட்டுக்கு எத்தனை இலட்சங்கள் தேவை..? ரணிலிடம் பணம் இருக்கிறதா..?
அது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு விசேட வர்த்தமானியில் நேற்று (10) பிரசுரிக்கப்பட்டது.
வீடு, இணைந்த குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத இடங்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் தொகை மதிப்பீடு நடத்தப்படவுள்ளதாக தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுரகுமார தெரிவித்தார்.
தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு மாவட்ட, பிரதேச செயலக, கிராம சேவகப் பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சரவை பேச்சாளரிடம் இது தொடர்பில் வினவினர்.
சனத்தொகை மதிப்பீட்டை மேற்கொள்ள பணம் இருக்கிறதா என இதன்போது வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், கலாநிதி அமைச்சர் பந்துல குணவர்தன, அரச வரவு செலவுத் திட்டத்தில் குறித்த செயற்பாடுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியலமைப்பு ரீதியிலான செயற்பாடுகளுக்கு குறைவின்றி பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது நாடு எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திருப்பும் ஒரு முக்கிய நாடகமாக இந்த ரணிலின் குடிசனக் கணக்கெடுப்பு நாடகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். இந்த நாடக அரங்கேற்றத்தை குறைந்தது 3 முதல் 4 மாதங்களுக்கு கொண்டு செல்லலாம். பொய்முட்டை பந்துல தெரிவித்துள்ளது போல இதுவரை எந்த பட்ஜட்டிலும் குறிப்பாக கடைசியாக வௌியிடப்பட்ட பட்ஜட்டில் இந்த குடிசன கணக்கீட்டுக்கான எந்த நிதி ஒதுக்கீடுகளும் நடைபெறவில்லை. அவன் தான் அதைச் செய்தது போல ஏற்கனவே அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுவது பெரிய விகடமாகவும் நாடகத்தின் மற்றொரு அரங்கேற்றமாகவும் தெரிகிறது.
ReplyDelete