Header Ads



மயிலை வேட்டையாடிய மலைப்பாம்பு - நேரில் கண்ட விஹாராதிபதி


கஹட்டகஸ்திகிலிய கோனகிரி ரஜமஹா விகாரைக்கு அருகில் உள்ள காட்டில் மலைப்பாம்பு ஒன்று மயிலை வேட்டையாடும் காட்சி கமராவில் பதிவாகியுள்ளது.


இந்த விகாரையில் வசிக்கும் விஹாராதிபதி விகாரைக்கு அருகில் இருக்கும் காட்டில் இருந்து சத்தம் கேட்டு சென்ற போது மலைப்பாம்பு ஒன்று மயிலை வேட்டையாடுவதை அவதானித்துள்ளார்.


குறித்த இடத்திற்கு சென்ற மயில் மலைப்பாம்பினால் பிடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தேரர் தெரிவித்துள்ளார்.


இந்த மலைப்பாம்பின் நீளம் 10 அடிக்கும் அதிகமாக உள்ளதாகவும், மலைப்பாம்பு வேட்டையாடிய மயிலும் மிகப் பெரிய மயில் என்றும் தேரர் கூறுகிறார்.


சில மணித்தியாலங்கள் போராடி மயிலை விழுங்கிய மலைப்பாம்பு மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பியதாக விகாரையின் விஹாராதிபதி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.