இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக
இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக பொலிஸ்மா அதிபர் இல்லாமல் பொலிஸ் திணைக்களம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் பதவிக் காலம் முடிந்துள்ளதுடன் அவருக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு முடிந்தும் 11 நாட்கள் ஆகின்ற போதிலும் புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படவில்லை.
கடந்த 26ஆம் திகதி சந்தன விக்கிரமரத்ன ஓய்வுபெற்றுவிட்டார். அவரது பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். பிரியாவிடை நிகழ்வுகூட அவருக்கு நடத்தப்படவில்லை.
அடுத்த பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு இன்னும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் பொலிஸ்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியபோதும் எதுவித முன்னேற்றமும் இல்லை.
பொலிஸ்மா அதிபருக்குத் தகுதியான எவரும் சிபாரிசு செய்யப்படாமையே இதற்குக் காரணம் என்று அறியமுடிகின்றது.
Post a Comment