அதிரடி காட்டும் பெண் கிராம சேவையாளர்
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு - வத்திராயன் பெண் கிராமசேவையாளர் எடுத்த துணைச்சலான நடவடிக்கையால் பலரையும் வியக்கவைத்துள்ளார்.
தன் துணிச்சலான நடவடிக்கையால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியாளர்களை கதிகலங்க வைத்துள்ளார் வத்திராயன் பெண் கிராமசேவையாளர்.
யாழ் குடநாட்டில் சட்டவிரோத செயல்கள் , வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் , கசிப்பு உற்பத்தி என்பது அடக்க முடியாத ஒன்றாகவே மாறியுள்ளது.
ஆண் கிராம சேவையாளர்கள் பலரும் துணிந்து நடவடிக்கை எடுக்க தயங்கும் வேளையில் வத்திராயன் கிராம அலுவலரின் துணிச்சல் பலரையும் வியக்கவைத்துள்ளது.
இந்நிலையில் கசிப்பு உற்பத்தியை தடுக்க துணிச்சலுடன் களமிறங்கியுள்ள சிங்கப்பெண் வத்திராயன் பெண் கிராமசேவையாளருக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.
மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களை , பிற கிராமசேவையாளகளும் , வத்திராயன் பெண் கிராமசேவையாளர் இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என பலரும் கூறிவருகின்றனர்.
Post a Comment