Header Ads



சஹ்ரானை கைது செய்யுமாறு நான் மீண்டும் மீண்டும் கூறியபோதும், ஏன் கைது செய்யவில்லை..?


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் முப்படைகளுடைய அதிகாரம் உங்களுடைய கையில் இருந்தது. ஏன் அந்த அந்த காலப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளைப் பலவீனமாக வைத்திருந்தீர்கள் என்ற கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார். 


அகளங்கம் என்ற நிகழ்ச்சிக்கு அளித்துள்ள செவ்வியின்போது இது தொடர்பில் அவர் பல விடயங்களை முன்வைத்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, 


சஹ்ரான் என்பவரை கைது செய்யுமாறு நான் பாதுகாப்பு சபைக் கூட்டத்திலே மீண்டும் மீண்டும் கூறியிருந்த சந்தர்ப்பத்திலும் கூட, கடைசியாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏன் சஹ்ரானை கைது செய்ய முடியவில்லை?


ஏன் என்னுடைய உத்தரவை நடைமுறைப்படுத்தமுடியவில்லை என்று அப்போது இருந்த பொலிஸ் மா அதிபர், பொறுப்பான அமைச்சர், பொலிஸ்துறைக்கு பொறுப்பான செயலாளர் ஆகியோரிடம் கேட்டேன்.


நான் நினைக்கின்றேன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இது தொடர்பில் விசாரித்தபோது, நான் ஸ்தாபித்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பந்தமான ஆணைக்குழு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த புலனாய்வுத்துறையினர் போன்றவர்கள் இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமான புலனாய்வுதுறையினரால் கொடுக்கப்பட்ட தகவல்கள் எனக்குக் கிடைத்ததாக அவர்களுடைய எந்த ஒரு அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளார். 

1 comment:

  1. மச்சானுடன் சேர்ந்து கொண்டு அத்தனை சூழ்ச்சிகளையும் அநியாயங்களையும் செய்துவிட்டு இப்போது தன் சுத்தவாளி, மற்ற அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கும் மறுசிறாக்கள் போல போலி முயற்சியில் ஈடுபட எத்தனிக்கின்றார் இந்த மை3. நீதிமன்றம் விதித்த ஏற்கனவே கொடுத்து முடிக்கவேண்டிய 10 கோடி ரூபாக்களையும் செலுத்தாமல் இருப்பதற்கு பெரிய மச்சானையும் பலதடவை நெருங்கியதாகக் கேள்வி.

    ReplyDelete

Powered by Blogger.