இலங்கை வரலாற்றில் முதன்முறையாக
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சாந்தனி விஜேவர்தன பதில் செயலாளராக நியமிக்கப்ட்டுள்ளார்.
குறித்த நியமனம் இன்று (20.07.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அரச அதிகாரியான சாந்தனி விஜேவர்தன தற்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.
காலி சவுத்லண்ட் பெண்கள் கல்லூரியின் பழைய மாணவியான சாந்தனி விஜேவர்தன, ருகுணு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் முதுமானிப் பட்டம் பெற்றுள்ளதோடு நெதர்லாந்தின் ஹேக் நகரில் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பட்டப்பின் படிப்பை பூர்த்தி செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி செயலகத்திற்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதல் தடவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment