இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்த நதீஷா
தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் நதீஷா ராமநாயக்க தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டார்.
இதேவேளை, பிரான்ஸில் நடைபெறும் பரா மெய்வல்லுநர் உலக சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் சமித்த துலான் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.
தாய்லாந்தின் பேங்கொக்கில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாள் இன்றாகும்.
மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தை 52.61 விநாடிகளில் கடந்து இலங்கையின் நதீஷா ராமநாயக்க தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.
இந்த போட்டியில் நதீஷா ராமநாயக்க வௌிப்படுத்திய அதிசிறந்த ஆற்றல் இதுவாகும்.
வெள்ளிப்பதக்கத்தை உஸ்பெகிஸ்தானும் வெண்கலப்பதக்கத்தை இந்தியாவும் வென்றன.
இதேவேளை, பிரான்ஸின் பாரிஸில் நடைபெறும் பரா மெய்வல்லுநர் உலக சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான F64 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சமித்த துலான் பங்கேற்றார்.
64.06 மீட்டருக்கு திறமையை வெளிப்படுத்திய அவர், இதன்போது வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
Post a Comment