தரையிறங்க வந்த விமானம் ஏற்படுத்திய பரபரப்பு - விடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென மீண்டும் மேலே பற்றக்க ஆரம்பித்தமையினால் அந்த விமானப் பாதையில் இருந்த தனது வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென விமானம் மேலே பறக்க ஆரம்பித்தமையின் காரணம் பலத்த காற்று வீசியுள்ளது.
இதனால் வீடு உள்ளிட்ட தென்னந்தோப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழன் 05.30க்கும் 05.50க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தாம் இதே நிலையை எதிர்கொண்டதாகவும், அவ்வாறு தரையிறங்கிய விமானம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விமானம் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ330 விமானங்களில் ஒன்று எனவும் சுமார் 75,000 குதிரைத்திறன் கொண்ட இரண்டு இயந்திரங்களைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment