Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதிக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்


மாதிவெலவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதியில் நாற்பத்திரண்டு வீடுகள் வெளியாட்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்த நிலைமை எம்.பி.க்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதால், அந்த வீடுகளில் வசிப்பவர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 19ஆம் திகதி, இந்த வீட்டுத் தொகுதியில் உள்ள வீட்டினுள் வெளிநபர் ஒருவர் நுழைந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் படையினரும் மிகவும் கலக்கமடைந்திருந்தனர். குறித்த நபர் இராணுவத்தினர் குழுமியிருக்கும் வீடொன்றிற்கு வந்துள்ளதாகவும், அதனை அடுத்துள்ள வீட்டில் வசிக்கும் சபை உறுப்பினர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத்தினர் வீட்டிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இங்கு நூற்றி இருபது வீடுகள் உள்ளன, அவற்றில் நூற்று பதினொரு வீடுகள் எம்.பி.க்களுக்காகவும், மீதமுள்ள ஒன்பது வீடுகள் வளாகத்தில் உள்ள பாதுகாப்புப் படைகள் மற்றும் சேவைப் பணியாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை மாத வாடகையாக ஆயிரம் ரூபாயில் முன்பதிவு செய்ய எம்பிக்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.