Header Ads



சிறுவயதில் பெற்றோரை இழந்தாலும், குர்ஆனை முழுவதும் மனனமாக நெஞ்சில் சுமந்திருக்கும் சகோதரர்கள்


இந்தோனிஷியாவில் உள்ள ஜகார்தா நகரில் உள்ள எதீம்கானாவில் (அநாதை விடுதி மதரஸா) பயின்ற இரு சகோதரர்கள்..!


சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்தவர்கள்..! 

அக்பர் & கலீம்...!


திருக்குர்ஆனை முழுவதும் மனனமாக நெஞ்சில் சுமந்திருக்கிறார்கள்.


திருக்குர்ஆனில் எங்கு கேட்டாலும் ஓதுகிறார்கள்...!


மட்டுமல்லாமல் எந்த வசனத்தை கேட்கப்படுகிறதோ அதற்கு முன் இரு பக்கங்களில் உள்ள வசனங்களையும் ஓதிக் காட்டுகிறார்கள்...!


அழுத்தம் திருத்தமாக தஜ்வீத் முறைப்படி நிறுத்தி நிதானமாக ஓதுகிறார்கள்.


தங்களது மனதில் அல்லாஹ்வின் மிகப்பெரும் பொக்கிஷத்தை சுமந்திருக்கிறோம்... என்ற எந்த ஆணவமும் இல்லாமல் மிக பணிவாக பவ்யமாக நின்று ஓதிக் காட்டும் இவர்களின் நிலை தான் மனதை வெகுவாக கவர்கிறது.


بارك الله لهما في علمهما وفي عمرهما وفي عافيتهما يارب العالمين 🤲📖


No comments

Powered by Blogger.