Header Ads



"போர்க் காலத்தில் சமையல் அறையில் இருந்த வீரசேகர, தற்போது மனநோயாளி போல் செயற்படுகிறார்"


தமிழர்களுக்கு 13ஐ வழங்க வேண்டாம், சமஷ்டியை வழங்க வேண்டாம் எனக் கூறிக்கொண்டு மனநோயாளி போல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செயற்பட்டு வருவதாக தெரிவித்த கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , தமிழ் மக்களை சீண்டிப்பார்க்க வேண்டாம் எனவும் எச்சரித்தார்.


எனவே மனநோயாளி போல் செயற்படும் சரத் வீரசேகரவை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றுள்ளார். அவர் எங்களை அழைத்துப் பேச்சு நடத்தியபோது 13 இல் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்ற தொனியில் பேசினார்.


சமஷ்டி முறையிலான தீர்வே எமது விருப்பமாகும். 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது அரசமைப்பில் உள்ள ஒரு விடயம். எனவே, அரசமைப்பை மீறுவதற்கு ஜனாதிபதிக்குக் கூட அருகதை இல்லை.


ஆனால் ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அரசமைப்பை மீறும் பாதகச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தீர்வை வழங்குவார்களா என்ற ஐயப்பாடு எம்முள் உள்ளது.


போர்க்காலத்தில் சமையல் அறையில் இருந்த சரத் வீரசேகர, தற்போது மனநோயாளி போல் செயற்பட்டு வருகின்றார். குருந்தூர்மலை விவகாரத்திலும் மூக்கை நுழைக்கின்றார்.


சரத் வீரசேகர என்பவர் யார்? அவரை இயக்குவது யார்? அமெரிக்கத் தூதுவர், கனேடிய தூதுவர் எல்லாம் நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.


இந்தியாவையும் சாடுகின்றார். எனவே அந்த மனநோயாளியைச் சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் காட்டமாக தெரிவித்தார்.   Tamilw

2 comments:

  1. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நாம் வலியுறுத்துவது இந்த மனநோயாளியை அங்கொட மனநோய் வைத்தியசாலையில் தனி அறையில் அடைத்து சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் யாருக்கும் அது புரியவில்லை என்பதை விட புரிந்தகொள்ளத் தயாராக யாரும் இல்லை. இன்னும் இவனைப் பாராளுன்றத்தில் தொடர்ந்தும் வைத்திருந்தால் இன்னும் ஒரு சில மாதங்களில் தியவன்னாவ கட்டடத்தின் அத்தனை நபர்களுக்கும் தனியான ஒரு மனநோய் வைத்தியசாலை தியவன்னாவையிலேயே கட்டி அதில் 225 ஐயும் அடைத்து பலவருடங்கள் மருந்துகளுடன் போதைவஸ்துக்களும் கலந்து கொடுத்தால் தான் அந்த நோயாளர்கள் சீரடையும வாய்ப்பு ஓரளவேனும் இருக்கும்.

    ReplyDelete
  2. இந்த தமிழ் பயங்கரவாதியின் குடியுரிமையை பறித்து நாட்டை விட்டு தூரத்தியடிக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.