Header Ads



பாபர் அசாம் என்ற அஹமத் ஹிஷாமும் - மகனின் கனவுக்கு துணை நிற்கும், தந்தையின் உருக்கமான வார்த்தைகளும்


உலகளாவிய கிரிக்கட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பேருவளையில் இளம் கிரிக்கட் வீரர் அஹமத் ஹிஷாம்.


களுத்துறை மாவட்டம் பேருவளையை சேர்ந்த ,  கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி தலைவர்  பாபர் அசாமை  அணுவணுவாக பின்பற்றும்    இளம் கிரிக்கட்  வீரர் அஹமத் ஹிஷாம் அவர்கள் பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் அவர்களுக்கு அவரின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கிய நிகழ்வு உலகளாவிய கிரிக்கட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


காலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டியின்போது, பேருவளையை சேர்ந்த இளம் கிரிக்கட் வீரர் அஹமத் ஹிஷாம் தனது கிரிக்கட் முன்மாதிரி வீரர் பாபர் அசாம் அவர்களுக்கு நினைவுச்சின்னம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கி வைத்தார் .


அஹமத் ஹிஷாம் அண்மையில் இந்தியா பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கிரிக்கட் தொடரில் இலங்கை அணி சார்பாக பங்குபற்றி  தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்று ஆட்டநாயகன் விருதை வென்றார் .


அஹமத் ஹிஷாம் அவர்கள் பாபர் அசாமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அஹமத் ஹிஷாம் இன் தந்தை தெரிவிக்கையில் ; அஹமத் ஹிஷாம் , கிரிக்கட் விளையாட்டில் பாபர் அசாம் அவர்களை அணுவணுவாக பின்பறுவார் , அவரின் துடுப்பாடும் விதமும் பாபரை ஒத்ததாகவே  இருக்கும், மேலும் அவர் அணியும் கிரிக்கட் ஜெர்சி இலக்கம் கூட பாபரின் இலக்கம் ஆகும், பாபரை சந்தித்து அவருடன் புகைப்படம் ஒன்றை எடுப்பது அஹமத் இன் பலநாள் கனவாகவே இருந்தது . இறைவன் அருளைக் கொண்டு அந்த கனவு இன்று நனவானது.


மேலும் தெரிவிக்கையில், அஹமத் ஹிஷாம் பொழுது போக்கிற்காக தொலைகாட்சி பார்த்தால் கூட கிரிக்கட் மாத்திரம் தான் பார்ப்பார். எப்பொழுதும் கிரிக்கட் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருப்பார், அதுமட்டுமல்லாமல் அவர் வாரத்தில் அனைத்து நாட்களிலும் கிரிக்கட் பயிற்சியில் ஈடுபடுவார்.


நானொரு ஆங்கில ஆசிரியர் ,எனது மகனின் கனவுக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன், இதனால் பல விமர்சனங்களுக்கும் ஆளாகிவருகிறேன். காரணம்: விளையாட்டு துறை அவசியம் இல்லாத ஒன்று என்ற ஒரு தவறான மாயை சமூகத்தின் மத்தியில் காணப்படுகிறது. ஆயினும் இவற்றால்  நான் சளிக்கவில்லை , இறுதி வரை என் மகனின் கிரிக்கட் கவிற்காக பாடுபடுவேன் .


சமூகமும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


பேருவளை செய்தி

No comments

Powered by Blogger.