முன்னாள் ஜனாதிபதிகளின் செலவுகளுக்கு கட்டுப்பாடு
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் செயலாளர் கடந்த மாதத்திற்கான சட்டமூலங்களை நேற்று முன்தினம் (ஜூலை 24) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளின் சட்டமூலங்கள் எதனையும் ஜனாதிபதி அலுவலகம் இப்போது தீர்த்து வைக்காது என முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்புரிமைகள் தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சட்டமா அதிபர் அலுவலகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் உத்தரவின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கான நிதி மட்டுமே வழங்கப்படும்.
இந்த பஞ்ச நாயின் வீட்டு மின்சாரம், நீர்க்கட்டணத்தைச் செலுத்த அரசாங்கம் தவறினால் செத்து மடிவான், பாவம் அவனிடம் பணமேது, தொழிலின்றி ஒரு வருடத்துக்கு மேல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றான். சொந்த வீடு இல்லை, வீட்டு வாடகை கொடுக்கப்பணமில்லை. இப்படியான ஒருவனை அரசாங்கம் கவனிக்க வேணடும். செல்லும் நாடுகள் அனைத்தும் அவனையும் அவனது குடும்பத்தையும் விரட்டிவிடுகின்றன. கண்டி கொழும்பில் 50 மேற்பட்ட ஹோட்டல்கள் அவனுக்குச் சொந்தமாக இருக்கின்றன தான். ஆனால் அவற்றில் தங்கமுடியவிலலை. யாராவது வந்து கொன்று போட்டுவிடுவான்கள்.
ReplyDelete