பொது வேட்பாளரா வீரவங்ஸ..?
எதிர்க்கட்சியை சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் கடந்த காலங்களில் இது தொடர்பாக தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் போது ஒரு தரப்பு பொது வேட்பாளராக டளஸ் அழகப்பெருமவை நிறுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளதுடன் மற்றைய தரப்பு விமல் வீரவங்ஸவை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என யோசனையை முன்வைத்துள்ளது.
எனினும் இது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதுடன் தொடர்ந்தும் இது குறித்து விவாதிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் அண்மையில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் தமது கட்சியின் சார்பில் டளஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என தீர்மானித்திருந்தது.
இதனிடையே எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய தரப்பினர், விமல் அல்லது டளஸ் ஆகியோரில் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவது தொடர்பில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல்வாதி அல்லாத புத்திஜீவி ஒருவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என இந்த தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளனர்.
Post a Comment