Header Ads



ஓட்டப் போட்டியில் புது சாதனை


சுகததாச அரங்கில் நடைபெறும் 101 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியின் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் காலிங் குமாரகே வெற்றியீட்டி போட்டி சாதனையை முறியடித்ததோடு இலங்கை வீரர் ஒருவரின் நான்காவது சிறந்த காலத்தையும் பதிவு செய்தார்.


இந்த போட்டியின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் (29) நடைபெற்ற 400 மீற்றர் ஓட்டப் போட்டியை காலிங்க குமார 45.07 விநாடிகளில் பூர்த்தி செய்தார். இதன்மூலம் ரொஹான் பிரதீப் குமார 23 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைநாட்டிய போட்டிச் சாதனையை அவர் முறியடித்தார்.


அதேபோன்று இலங்கை மண்ணில் வீரர் ஒருவர் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதிவு செய்த சிறந்த காலமாகவும் இது உள்ளது. முன்னதாக 2002ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஆசிய சம்பியன்சிப் போட்டியில் குவைட்டின் அல் ஷம்மரி பௌசி 400 மீற்றர் ஓட்டப்போட்டியை 45.21 விநாடிகளில் பூர்த்தி செய்ததே சிறந்ததாக இருந்தது.


எனினும் 1998இல் புகுகாவில் நடந்த ஆசிய சம்பியன்சிப் போட்டியில் சுகத் திலகரத்ன 44.61 விநாடிகளில் போட்டித் தூரத்தை நிறைவு செய்ததே 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் தேசிய சாதனையாக இருப்பதோடு அடுத்த இரு சிறந்த காலஙகளும் திலகரத்னவிடமே உள்ளது.

No comments

Powered by Blogger.