இலங்கையர்களுக்கு சவூதி அரேபியாவின், இஸ்லாமிய புதுவருட நல்வாழ்த்துக்கள்
ஹிஜ்ரி 1445, இஸ்லாமிய புத்தாண்டின் உதயமானது சமாதானம், நல்லிணக்கம் மற்றும் செழிப்புக்கான புதிய நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் எமக்கு அளிக்கின்றது.
இச் சந்தர்ப்பத்தில், இலங்கை மக்களுக்கு எனது அன்பான நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
புத்த சமய மற்றும் கலாசார அமைச்சின் ஒத்துழைப்புடன் சவூதி அரேபிய தூதரகம் அண்மையில் நடாத்திய அல் குர்ஆன் மனனப் போட்டி, எமது இரு நாட்டு மக்களுக்கும் இடையே நல் உறவுகளை வளர்ப்பதற்கும், இஸ்லாமிய விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என நம்புகிறேன்.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்கஹ்தானி
Post a Comment