Header Ads



பெரிய தங்க செயின் கேட்டு நிர்வாண சாமியார் அடம்பிடிப்பு - கடவுள் ஆசிர்வாதம் சொன்னதாக தெரிவிப்பு


தமிழகத்தின் தென்காசி அருகே நகை கடையில் நுழைந்த நிர்வாண சாமியார் பெரிய தங்க செயின் கேட்டு அடம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நகை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் மஹந் அசோக் கிரி சாமியார்.


இவர் 30 நாட்கள் புனித யாத்திரையாக தமிழகம் வந்ததாக கூறப்படுகிறது. சங்கரன் கோவிலில் உள்ள ராஜபாளையம் முதன்மை சாலையில் இயங்கி வரும் நகை கடையை கண்ட அந்த நிர்வாண சாமியார் உடனடியாக கடைக்குள் நுழைந்தார்.


கடவுள் ஆசிர்வாதம் செய்ய சொல்லி அனுப்பியதாக கூறிய அந்த நிர்வாண சாமியார் கழுத்தில் அணிவதற்கு ஒரு தங்க செயின் வேண்டும் என்று கேட்டுள்ளார்.


உடனே கடை உரிமையாளர் ஒரு சவரன் மதிப்புள்ள தங்க செயினை கொடுப்பதற்காக எடுத்த போது அது வேண்டாம் என்று அதை விட பெரிய செயின் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.


அதன் பின்னர் அந்த நகை கடை உரிமையாளர் ஒரு சவரன் தங்க செயின் மற்றும் வழிச் செலவுக்கு பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார். அதேவேளை அந்த சாமியாரிடம் ஏராளமானோர் ஆசி பெறுவதற்காக கடை முன் திரண்டதாகவும் கூறப்படுகின்றது.



No comments

Powered by Blogger.