அமெரிக்கா சென்றிருந்த இலங்கை, இளைஞன் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்றிருந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜோர்ஜியாவின் கென்னசோவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அட்லாண்டாவுக்கு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஹசித் நவரத்ன என்ற 34 வயதுடைய இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டாவில் காரில் சடலமாக மீட்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இளைஞனின் மரணத்திற்கான காரணம் இதுவரை பொலிஸாரினால் உறுதிப்படுத்தவில்லை. ஜூலை மாதம் 7ஆம் திகதி ஹசித் நவர்த்னே காணாமல் போனதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
அவர் ஜூலை மாதம் 2ஆம் திகதி அட்லாண்டாவுக்குச் செல்லவிருந்ததாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Post a Comment