பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்கள் குறித்து, அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
நாடு முழுவதும் உள்ள மத ஸ்தலங்களின் சொத்துக்கள் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்காலத்தில் அனைத்து மத ஸ்தலங்களும் பதிவு செய்யப்படும் என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மகாநாயக்கர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடன் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதன்படி, எதிர்காலத்தில் கிராம உத்தியோகத்தர்களின் எல்லைக்குள் இருக்கக்கூடிய மத ஸ்தலங்களுக்கான அளவுகோல்களை தயாரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது அடுத்த பயங்கர நாடகம், சிலவேளை இதன் பின்னணி நாடகத்தின் இலக்குஅமைச்சருக்கே தெரியாமலிருக்கும் . முழு மதஸ்தலங்கள் குறிப்பாக பன்ஸல, கோவில்கள், பள்ளிவாயல்கள், கிறிஸ்தவ ஆலயங்களின் பெயரில் கோடான கோடி சொத்துக்கள் இருக்கின்றன. அவற்றை இலக்குவைத்து இந்த களியாட்ட நாடகம் அரங்கேறப் போகின்றது. நகரங்களில் சில முக்கிய காணிகள், வயல்கள், பெரிய நகரங்களில் கடைகள், வியாபார ஸ்தாபனங்கள், தொழிற்சாலைகள் கூட உள்ளன அவை அனைத்தும் மத ஸ்தாபனங்களுக்குச் சொந்தமானவை. அவற்றை அரசாங்கத்தின் பெயரில் பதிவு செய்தால் அவற்றை விற்று அரசில் உள்ள சக்கிலிக்கூட்டத்துக்கு கோடான கோடி உழைக்கலாம். ரணிலின் பொருளாதார அபிவிருத்தியின் அடுத்த முக்கிய கட்டமிது.
ReplyDelete