ஜனாஸாக்களை எரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை - பாராளுமன்றத்தில் அறிவிப்பு
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கேள்வியெழுப்பிய ரவூப் ஹக்கீம் எம்.பி, “ கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு கொரோனா குழு எடுத்த தீர்மானம் வைராக்கியமிக்க குற்றம். அதனால் இவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதனால் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட கொரோனா குழு அதிகாரிகள் மேற்கொண்ட தவறான தீர்மானம் தொடர்பாக அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ள தயாரா?.
ஏனெனில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு தீர்மானத்தை எடுக்காத நிலையில், பிழையான விஞ்ஞான அடிப்படையில் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.
முஸ்லிம்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த அதிகாரிகள் தொடர்பாக குறைந்தபட்சம் அமைச்சரவை மட்டத்திலாவது விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? பிழையான தீர்மானம் மேற்கொண்ட குழுவின் அதிகாரிகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறே நான் பகிரங்கமா கேட்கிறேன்” என்றார்.
தியவன்னாவையில் உள்ள மந்தி(ரி)கள், மந்திகளை மாத்திரம் விசாரித்து அவரவர்கள் ஒருவருக்கொருவர் மன்னித்துக் கொள்வார்கள். இந்த தியவன்னாவ விசாரணையை பொதுமக்கள கேட்கவில்லை. அது அவசியமுமில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பட்ட மனவேதனை,கடும்கவலை, உதவிக்கு யாருமில்லாத வெரும் மனவிரக்தி, இழப்புகளைத் தாங்க முடியாதவர்களுக்கு உள்ளத்தால் சகிக்கமுடியாத கவலையும் துன்பத்துக்கும் நட்ட ஈடு கொடுக்க முடியாது. அது அவர்களை அந்த நிலைக்கு காரணமான அத்தனை பேரையும் சட்ட ரீதியாக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி சரியான தண்டனையும் இழப்புக்கு அதிஉச்ச நட்டஈட்டையும் வழங்குமாறு கட்டளையிடவும் முடியாத பட்சத்தில் நிரந்தரமான அந்த சைத்தான்களை சிறையில் தள்ளவேண்டும்.
ReplyDeleteஇனவெறி தலைக்கு மேல் அடித்த கோதா முஸ்லிம்களின் மீதுள்ள வெறுப்பு அவர்களின் சொத்துக்கள், உடைமைகளை அப்படியே அபகரித்துக் கொள்ளும் திட்டத்தின் ஒன்று தான் முஸ்லிம் ஜனாஸாக்களை எரித்தல், அவனுடைய கட்டளையை செயல்படுத்த நாடுமுழுவதும் உள்ள சுகாதாரத்துறை உற்பட அத்தனை இனவாதிகளையும் பயன்படுத்தி வெறுமனே அவ்வப்போது வேறு காரணங்களால் காலம் சென்ற முஸ்லிம்களையும் கொரோனா சீல் குத்து எரித்துச் சாம்பலாக்கினார்கள். இந்த அநியாயத்துடன் தொடர்பான இனவாதிகள் நிச்சியம் அத்தனை பேருக்கும் அல்லாஹ் உலகிலும் மறுமையிலும் மிகவும் பொறுத்தமான மிகவும் கடுமையான தண்டனையை வழங்குவான் என்ற ஆழமான நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அது தவிர தியவன்னாவையில் உள்ள மந்தி(ரி)கள் சவூதி அரேபியா அரபு நாடுகளுக்குப் பம்மாத்துக் காட்ட அந்த பாவம் பற்றி விவாதிக்கின்றார்களாம். விவாதித்து அதன் சூட்டில் பணியாரம் சுட்டு அந்த தியவன்னாவ கூட்டம் பரிமாரட்டும். அந்த நாடகத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு எந்த நம்பிக்கையும் கியைாது.
ReplyDelete